search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஸ்வேந்திர சாஹல்"

    • பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை
    • இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம் என சேவாக் கருத்து

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி மோசமாக தோற்றது குறித்து தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப்சிங் கூறியதாவது:-

    லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும்.

    குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இதே போல ரிஷப் பண்டுக்கு சரியான முறையில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. அடுத்த உலக கோப்பைக்கான அணியை இப்போதே திட்டமிட வேண்டும். ரோகித் சர்மா, வீராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அச்சம் இல்லாமல் விளையாடவில்லை. பயப்படாமல் களத்தில் ஆடவில்லையென்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும். அச்சமற்ற கிரிக்கெட் இப்போது காணாமல் போய் விட்டது. தோற்றாலும் குறைந்தபட்சம் போராடி இருக்கவேண்டும்.

    பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு துறைக்கு எதிராககூட சவால் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம்.

    கடந்த உலக கோப்பையில் இருந்த அதே அணுகுமுறை தான் தற்போதும இருக்கிறது. நெருக்கடியான போட்டியில் வீராட் கோலி மட்டுமே ரன்களை எடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், 'இந்திய அணியின் இந்த தோல்வியால் அதிகமாக விமர்சிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடியதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் அதிகமாக விமர்சிக்க முடியாது. இங்கிலாந்து அணி நிலைமையை சிறப்பாக கையாண்டு இந்தியாவை முற்றிலும் வெளியேற்றியது' என்றார்.

    'ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அணியின் வெற்றியை சொந்த வெற்றியை போல் கொண்டாடினால், தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

    • யுஸ்வேந்திர சாஹல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.

    லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 1983-ம் ஆண்டு 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இந்திய வீரர்களின் சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக ஆஷிஸ் நெக்ரா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது.
    • ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் சாஹல் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 61 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டும் டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2022 சிறந்த பந்து வீச்சாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது விளையாடி வரும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்நிலையில் சாஹல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஸ்வான் கூறியதாவது:-

    ஸ்வான்

    ஸ்வான்

    சாஹாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விருப்பம் என்றால் உடனடியாக சேர்த்துக் கொள்வேன். இதை நான் சாஹலுடன் அமர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் உலகின் சிறந்த ஸ்பின்னர் என்று நான் நம்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் லெக்-ஸ்பின் வீசும்போது குறிப்பாக பனி மற்றும் ஈரமாக இருக்கும் போது அவர் சிறப்பாக செயல்படுவார்.

    டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

    டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது. இங்கிலாந்து பரபரப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறது. மெக்கலத்தின் நெறிமுறைகள் இந்திய அணியிலும் உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகளிலும் பரவியிருக்கும் என்று நம்புகிறேன். இது பார்வையாளர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×